அரசாணை (2டி) எண்.42 நாள்: 26.11.2021 - பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு! - Daily Dhuniya

Breaking

Friday, November 26, 2021

அரசாணை (2டி) எண்.42 நாள்: 26.11.2021 - பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

2 கோடியே 15 லட்சம் குடும்பங்களுக்கு கரும்பு வழங்க ரூ.71 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு.

தமிழர்த்திருநாள் தைப் பொங்கல் 2022-அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு(டி1)த்துறை

அரசாணை (2டி) எண்.42

நாள்: 26.11.2021

திருவள்ளுவர் ஆண்டு 2052 பிலவ வருடம் கார்த்திகை மாதம் 10-ஆம் நாள்

படிக்க:

1 அரசாணை (2டி) எண். 41, கூட்டுறவு. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (டி1)த் துறை, நாள், 17.11.2021.

2. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநரின் கடித எண். வர்த்8/58495/2021,நாள்: 17.11.2021.

ஆணை:

மேலே ஒன்றில் படிக்கப்பட்ட அரசாணையில், வருகிற 2022-ஆம் ஆண்டு தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை, 215,48,060 குடும்ப அட்டைதாரர்களுக்கு பயனாளி ஒருவருக்கு (ரூபாய்ஆயிரத்து ரூ.505/. செலவில் வழங்க மொத்தம் ரூ.1088,17,70,300/ எண்பத்தெட்டு கோடியே பதினேழு இலட்சத்து எழுபதாயிரத்து முந்நூறு மட்டும்) ஒப்பளிப்பு செய்து ஆணைகள் வெளியிடப்பட்டன. 2. மேலே இரண்டில் படிக்கப்பட்ட கடிதத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருடன் கலந்து ஆலோசித்து, பொங்கல் பரிசுத் தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 20 பொருட்களில், முந்திரி 50 கிராம். திராட்சை 50 கிராம் மற்றும் ஏலக்காய் - 10 கிராம் ஆகியவைகளை மட்டும், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மூலம் கொள்முதல் செய்து, அரசு நியாயவிலைக் கடைகள் மூலம், பயனாளிகளுக்கு வழங்கிடவும், மேலும், 17.11.2021 வரை நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன், கரும்பு

No comments:

Post a Comment