தமிழ் தகுதி தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாளை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
அதில், பகுத்தறிவு, திராவிட சுயமரியாதை இயக்கம் பற்றிய பாடங்கள் இடம் பெற்றுள்ளன.அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்படும் போட்டி தேர்வுகளில், தமிழ் மொழி தகுதி தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது.
அதில், தமிழ் மற்றும் ஆங்கிலம் இடையே மொழி பெயர்த்தல், சுருக்கி எழுதுவது, பொருள் உணர்வது, சுருக்க குறிப்பில் இருந்து விரிவாக்கம் செய்வது, கட்டுரை எழுதுவது, அலுவல் ரீதியான கடிதம் எழுதுவது மற்றும் தமிழ் மொழி அறிவை வளர்த்து கொள்வது போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் தற்கால நிகழ்வுகள், சமுதாய பிரச்னைகள், பகுத்தறிவு இயக்கம், திராவிடம், சுயமரியாதை இயக்கம் குறித்த தகவல்கள், கட்டாய பாடங்களாக வைக்கப்பட்டுள்ளன.
கட்டுரை எழுதுவது, பிரித்தெழுதுதல், ஒரே தொடர் அமைத்தல், எதிர்மறை வாக்கியம் அமைத்தல், பிழை நீக்குதல் போன்ற கேள்விகளும் மாதிரி வினாத்தாளில் இடம் பெற்றுள்ளன.
தி.மு.க., ஆட்சி நடப்பதால், டி.என்.பி.எஸ்.சி., பாடத்திட்டத்தில் திராவிடம், பகுத்தறிவு, சுயமரியாதை இயக்கம் பற்றிய பாடங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment