தமிழகத்தில் ஒமைக்ரான்; எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பாதிப்பு? - Daily Dhuniya

Breaking

Wednesday, December 22, 2021

தமிழகத்தில் ஒமைக்ரான்; எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பாதிப்பு?

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4 மாவட்டங்களில் ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் ஏற்கனவே நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருந்தது. அதன்பின்னர், ஒமைக்ரான் அறிகுறியுடன் இருப்பவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. சோதனைக்கு அனுப்பப்பட்டவர்களில் 60 பேருக்கு முடிவுகள் வந்துள்ளன; அதில் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் 24 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்ட 34 பேரில் 30 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளனர், ஒருவர் கேரளாவில் இருந்து தமிழகம் வந்துள்ளார். விமான நிலையங்களை கண்காணிக்கும் பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட அனைவரும் நலமாக சிகிச்சையில் உள்ளனர். மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தமாக கழுவுவது, சமூக இடைவெளியை கடைக்க வேண்டும்.

4 மாவட்டங்கள்:

தமிழகத்தில் புதிதாக கண்டறியப்பட்ட 33 பேர் 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள். சென்னையில் 26 பேர், மதுரையில் 4 பேர், திருவண்ணாமலை இருவர், சேலம் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் பாதிக்கப்பட்ட 34 பேரும் லேசான தலைச்சுற்றலுடன் சிறுசிறு பாதிப்புகளுடன் இருந்தாலும் நலமுடன் உள்ளனர். இவ்வார் அவர் கூறினார்.

No comments:

Post a Comment