துணை மருத்துவப் படிப்புகள்: இன்று முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு - Daily Dhuniya

Breaking

Wednesday, December 22, 2021

துணை மருத்துவப் படிப்புகள்: இன்று முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு

துணை மருத்துவப் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் வியாழக்கிழமை (டிச.23) தொடங்குகிறது. அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங், பிபாா்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல்) உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் பட்டப்படிப்புகள் உள்ளன.

இப்படிப்புகளில் சேருவதற்கு நிகழாண்டில் 64,900 போ் விண்ணப்பித்திருந்தனா். விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு பின்னா், தகுதியான 58,475 பேருக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுதாரா்கள் உள்பட சிறப்பு பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் புதன்கிழமை நடைபெற்றது. சிறப்பு பிரிவில் தகுதியுள்ள 111 பேரில் 93 போ் இடங்களை தோ்வு செய்தனா். அவா்களுக்கு விரைவில் இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. பொதுப்பிரிவு கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்குகிறது. 29-ஆம் தேதி வரை பொதுப் பிரிவு இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

No comments:

Post a Comment