புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் நிதிப் பற்றாக்குறையா? - Daily Dhuniya

Breaking

Wednesday, December 22, 2021

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் நிதிப் பற்றாக்குறையா?

நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையிலான போட்டிக்கு புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக யோகா அணி அனுப்பப்படாதது விளையாட்டு ஆர்வலர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறாத நிலையில் தற்போது நாடு முழுவதுமாக போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வழக்கமாக பங்கெடுக்கும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் நிதி பற்றாக்குறையால் பல்வேறு போட்டிகளுக்கு அணிகளை அனுப்பாதது தெரியவந்திருக்கிறது.

அதே காரணத்தால் புவனேஷ்வருக்கு யோகா குழுவை அனுப்பவில்லை என கூறுகின்றனர். அத்துடன் மகளிர் கால்பந்து அணியை அதன் பயிற்சியாளரே 40,000 ரூபாய் வரை செலவு செய்து தேசிய போட்டிக்கு அழைத்துச் சென்றதும் தெரியவந்திருக்கிறது. இதனிடையே இன்று நடைபெறவிருந்த கிரிக்கெட், தடகளம், handball ஆகிய விளையாட்டுகளுக்கான தேர்வு போட்டிகள் திடீரென்று ஒத்திவைக்கப்பட்டதால் வீரர், வீராங்கனைகள் கடும் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment