நாளை 24-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - Daily Dhuniya

Breaking

Thursday, December 23, 2021

நாளை 24-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 24-ந் தேதி நடக்கிறது

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் மற்றும் மாதிரி தொழில் நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 24-ந் தேதி சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது. வேலைக்கு ஆட்கள் தேவைப்படும் தனியார் நிறுவனங்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

தனியார் துறையில் வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் வேலை அளிக்கும் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் உருவாக்கப்பட்டுள்ளது. தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 24-ந் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. முகாமில் கம்ப்யூட்டர் ஆபரேட் டர், சூப்ரவைசர், மெஷின் ஆபரேட்டர், சேல்ஸ் என்ஜினீயர், தையலர் போன்ற பணிக்காலியிடங்களுக்கு நேர்முகத்தேர்வுகள் நடைபெற உள்ளன. வேலைக்கு ஆட்கள் தேவைப்படும் நிறுவனங்கள் தேவைப் படும் பணியாளர்களின் எண்ணிக்கை, கல்வித்தகுதிபோன்ற காலிப்ப ணியிட விவரங்களை முன்னதாகவே சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டும் மையத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment