தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டுக்கான கட்டணம் குறைக்கப்படுமா?
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதில்
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் படிப்புக் கான புத்தகங்கள் கண்காட்சி நேற்று நடந்தது. அதை தொடங் கிவைத்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல் ராஜ், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
மாணவர்கள் தமிழ் வழியில் என்ஜினீயரிங் படிப்பதன் மூலம் நன்றாக அதை உள்வாங்கி கற்பார்கள். ஜெர்மனி, ஜப்பான், ரஷியாபோன்றநாடுகளில் தாய்மொழியில்தான் தொழில்நுட்ப படிப்புகளை படித்து வருகிறார்கள். ஆகவே தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தாய்மொழி கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் படிக்கும் மாணவர்க ளுக்கு செமஸ்டர் தேர்வு தாளுக்கு மறுமதிப்பீடு செய்ய ரூ.700 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த கட்டணத்தை குறைப்பது குறித்து குழு அமைக்கப்பட்டு பரிசீலிக்கப்படும். மேலும் பாடச்சுமையை குறைக்கும் வகையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடங்கள் குறைக்கப்பட்டு இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார். இதேபோல், அண்ணா பல்கலைக்கழக தரப்பில் வெளியிடப் பட்டு இருந்த ஒரு செய்திக்குறிப்பில், தேர்வு கட்டணம் (இள நிலை/முதுநிலை), தற்காலிக சான்றிதழ், பட்டப்படிப்பு மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள், மறுமதிப்பீட்டு கட்டணம், மதிப் பாய்வு கட்டணம், எழுதப்பட்ட தாளின் நகல் பெறுவதற்கான கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது என்றும், இடம்பெயர்வு சான்றிதழ், சான்றிதழ் சரி பார்ப்பு, சான்றிதழ்களில் திருத்தம், பட்டதாரி மாணவர்களுக் கான சான்றிதழ் நகல், விடைத்தாள் நகல் பெறுவதற்கான கட்ட ணங்களுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி. சேர்த்து பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

No comments:
Post a Comment