போட்டித்தேர்வு, வேலைவாய்ப்புக்கு உதவும்: 'உங்கள் நூலகம் உள்ளங்கையில்’ செயலி - Daily Dhuniya

Breaking

Thursday, November 25, 2021

போட்டித்தேர்வு, வேலைவாய்ப்புக்கு உதவும்: 'உங்கள் நூலகம் உள்ளங்கையில்’ செயலி

போட்டித்தேர்வு, வேலைவாய்ப்புக்கு உதவும்: 'உங்கள் நூலகம் உள்ளங்கையில்’ செல்போன் செயலி

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்

டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா மற்றும் பொதுநூலகத்துறையின் மின்நூலகம் சார்பில் உங்கள்நூலகம் உள்ளங்கையில் எனும் செல்போன் செயலியினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டுநூலகத்தில் நேற்று நடைபெற்றது. அந்தவ கையில் மாவட்டநூலக ஆணைக்குழுக்கள் மற்றும் கன்னிமாரா பொது நூலகத்தில் பணியாற்றும் 33 நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி பாராட்டுகளையும், மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித் தார்.

அதனைத்தொடர்ந்து இளைய சமூகத்தினர் மாநில, மத்திய அரசுகளின் பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள உதவும் 'உங்கள் நூலகம் உள்ளங்கையில்' என்ற ‘TN Employment News' என்ற செல்போன் செயலி மற்றும் Www.tnemployment.inஎன்ற இணை யதளத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். மேலும் உலக தமிழ் சமுதாயத்தினரும், வருங்கால சந்ததியின ரும் தொன்மையான, தமிழர் மற்றும் தமிழ் மொழியினை அறிந்து கொள்ளும் வகையில், தமிழகத்தில் பல்வேறு இடங் களில் உள்ள அச்சுநூல்கள், இதழ்கள், ஓலைச்சுவடிகள் உள் ளிட்ட ஆய்வாதார வளங்களை, பொது நூலக இயக்ககம் மின்னுருவாக்கம் செய்து இருக்கிறது. அதன்படி, 19 ஆயிரத்து 864 நூல்களும், 2 லட்சத்து 54 ஆயிரத்து 694 ஓலைச்சுவடி பக் கங்களும் மின்னுருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதனை எளிதாக பயன்படுத்தும் வகையிலான மின் நூலகத்தினையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். மின் நூலகத்தை www. tamilnadupubliclibraries.orgஎன்ற இணையதளம் வழியாகபயன்ப டுத்தலாம்.

No comments:

Post a Comment