மருத்துவ துறையில் 7,296 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்!
செய்தி வெளியீடு:
நாள்: 26.11.2021
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் மருத்துவத் துறையில் 7,296 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தகவல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் குறுகிய காலத்தில் 7,296 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (26-11-2021) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில், தேசிய நலவாழ்வு குழும அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆக.5 அன்று தமிழகத்தில் ஒரு புதிய புரட்சிகரமான திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு பொதுமக்கள் மத்தியில் மிகவும் பயனுள்ள திட்டமாகவும், உயிர் காக்கும் உன்னத திட்டமாகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்று வரை இத்திட்டத்தின்கீழ் 36 லட்சத்து 31 ஆயிரத்து 843 பேர் மருத்துவ பயன் பெற்றிருக்கிறார்கள். இத்திட்டத்தில் நீரிழிவு நோயாளிகள், இரத்த அழுத்த நோயாளிகள், பிசியோதெரபி, நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை, டயாலிசிசிஸ் போன்ற நோய்களுக்கு வீடு தேடி சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு, மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மாதம் கழித்து மீண்டும் அவர்களுக்கு சிகிச்சை, மருந்துகள் என்ற வகையில் 8 லட்சத்து 24 ஆயிரத்து 699 பேர் பயன்பெற்றிருக்கிறார்கள். சட்டமன்றக் கூட்டத்தொடரில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி புதிய பணியாளர்கள் செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் அமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்றைக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் 4 ஆயிரத்து 848 செவிலியர்களும், 2 ஆயிரத்து 448 சுகாதார ஆய்வாளர்களும் பணியில் அமர்த்திக்கொள்வதற்கும் உத்தரவிட்டுள்ளார்கள். மொத்தம் 7 ஆயிரத்து 296 புதியதாக பணியாளர்கள் விரைவில் பணியமர்த்தப்பட இருக்கிறார்கள். ஏற்கெனவே கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவும், கொரோனா இரண்டாவது அலையின்போதும் தற்காலிகமாக பணியாற்றிய செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் 12 ஆயிரத்திற்கும் மேல் இருக்கிறார்கள். இவர்களில் 4 ஆயிரத்து 570 செவிலியர்களும்,ஆயிரத்து 646 சுகாதார ஆய்வாளர்களும், மருத்துவ தேர்வாணையம் மூலம் சிறிய அளவிலும், கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்களும் இந்த பணியிடங்களில் அடங்குவார்கள். அவர்களைத் தவிர்த்து, ஏற்கெனவே பணியில் உள்ளவர்களின் பணிக்காலம் முடிவுற்று இருந்தாலும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் டிசம்பர் வரை நீட்டித்திருக்கிறார்கள். இப்பணியாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் மருத்துவ துறை செயலாளர், தேசிய நலவாழ்வு குழு இயக்குநர் மற்றும் மருத்துவ அலுவலர்களோடு கலந்தாலோசித்தன் அடிப்படையில் அவர்கள் அனைவரையும் நிரந்தர பணியாளர்களாக பணியில் அமர்த்துவது என்பது அரசுக்கு சாத்தியப்படாத ஒன்று. இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் நடைபெறாத ஒன்று. ஆனால் மனிதாபிமான அடிப்படையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி அரசின் சார்பில் 7,296 பணியாளர்களுக்கும் 20 மதிப்பெண்கள் வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பட்டப்படிப்பு அல்லது பட்டய படிப்பிற்கு 1 மதிப்பெண், மருத்துவமனையில் பணியாற்றிய அனுபவத்திற்கு 1 மதிப்பெண், அவர்கள் எங்கு வசிக்கிறார்களோ வசிப்பிடத்திற்கு 1 மதிப்பெண், கொரோனா காலத்தில் பணியாற்றியதற்கு 20 மதிப்பெண் என்று 100 மதிப்பெண்களில் அவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் பணியமர்த்தப்பட இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மாவட்ட நலவாழ்வு சங்கங்களின் (District Health Society) சார்பில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தலைமையில் பணியில் அமர்த்தப்பட இருக்கிறார்கள். எனவே இதில் இடைத்தரகர்கள் என்று வருபவர்களை யாரையும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்த அரசாங்கம் வெளிப்படைத்தன்மையோடு நடத்தப்பட்டு வருகிறது. 6 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோருக்கு வெளிப்படைத் தன்மையோடு பணிமாறுதல் வழங்கப்பட்டு சிறப்பாக செயலாற்றிக்கொண்டிருக்கிறோம். இப்போது பணியாற்றிக்கொண்டிருப்பவர்களுக்கும் சேர்த்து தெரிவித்துக்கொள்கிறோம். எனவே எந்தெந்த மாவட்டங்களில் தேர்வு நடைபெற உள்ளது என்பதை அறிந்து பங்கேற்க கேட்டுக்கொள்கிறோம். மக்கள் நல்வாழ்வுத்துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துதுறை இந்த துறைகளின் ஒருங்கிணைப்புடன் இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரியான இன்னுயிர் காப்போம் திட்டத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இதில் மருத்துவ துறை செய்ய வேண்டியது. சாலை விபத்துகளினால் பாதிக்கப்படுவர்கள் பெரும்பாலோனோர் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாததால் மூன்றில் ஒரு பகுதியினர் இறக்க நேரிடுகிறது. தகுந்த நேரத்தில் மருத்துவம் பார்ப்பது மட்டுமே விபத்துக்குள்ளானவர்களை காப்பாற்றுவதற்கான சரியான வழியாகும். இன்னுயிர் காக்கும் திட்டத்தில் ‘நம்மை காக்கும் 48’ திட்டத்தை மருத்துவ துறை செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை டிசம்பர்-15ற்குள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைக்க இருக்கிறார்கள். எந்த தேதி ? ஏந்த இடம் என்பது 609 மருத்துவமனைகளில்செயல்படுத்தப்படவிருக்கிறது. இதில் 204 மருத்துவமனைகள் தமிழக அரசின் சார்பில் மாவட்ட அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் செயல்பட செயல்படுத்தப்படவிருக்கிறது. 405 தனியார் மருத்துவமனைகளிலும் இத்திட்டம் இருக்கிறது. குறிப்பாக நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள், தமிழகத்தில் 500 இடங்களில் அதிகமாக நடப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த 500 இடங்களை ஒட்டி இருக்கிற மருத்துவமனைகளில், 405 தனியார் மருத்துவமனைகள் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும். எலும்பு முறிவுக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை நாங்கள் உறுதிப்படுத்தியிருக்கிறோம். விபத்துக்களில் பாதிக்கப்பட்டவரை காப்பாற்றிவிட முடியும் என தெரிந்த மருத்துவமனைகள் மட்டுமே இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் விபத்துக்குள்ளானவர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு சிகிச்சைக்காக ரூ.1 லட்சம் ரூபாயை தமிழக அரசு வழங்க இருக்கிறது. இது இந்தியாவிலேயே ஒரு முன்மாதிரியான திட்டமாகும். ஏற்கனவே விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச்செல்வதற்கு 124 அவசர கால சிகிச்சை ஊர்திகள் ஆக்ஸிஜன் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் இருக்கிறது. இந்த அவசரக் கால சிகிச்சை ஊர்திகள் இத்திட்டத்திற்காக 300ஆக உயர்த்தப்படவிருக்கிறது. அவசர கால ஊர்திகள் அனைத்து வசதிகளுடன் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் டாக்டர் தாரேஷ்அகமது இ.ஆ.ப., தமிழக சுகாதார திட்ட இயக்குநர் டாக்டர் உமா இ.ஆ.ப., தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குநர் திரு.ஹரிகரன் இ.ஆ.ப., மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் மரு.குருநாதன் கலந்துகொண்டனர்.
வெளியீடு: மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வு துறை, தலைமைச்செயலகம், சென்னை-600 009.

No comments:
Post a Comment