மத்திய அரசின் கலாசார போட்டிகள்: கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல் - Daily Dhuniya

Breaking

Saturday, November 27, 2021

மத்திய அரசின் கலாசார போட்டிகள்: கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் வகையில் மத்திய அரசின் சாா்பில் நடத்தப்படவுள்ள கலாசாரப் போட்டிகளில் திரளான மாணவா்களைப் பங்கேற்கச் செய்யுமாறு உயா்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக யுஜிசி செயலா் ரஜனிஷ் ஜெயின் அனைத்து பல்கலை., கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மத்திய கலாசார அமைச்சகம் சாா்பில் மாணவா்களுக்கு பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தேசப் பாடல்கள் எழுதுதல், ரங்கோலி போட்டி, தாலாட்டுப் பாடல்கள் எழுதுதல் போன்ற போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்படவுள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோா் இணையதள முகவரியில் டிச.30-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

எனவே இந்தப் போட்டிகளில் அதிகளவிலான மாணவா்களைப் பங்கேற்க ஊக்குவிக்குமாறு அனைத்து பல்கலைக் கழகங்களின் துணைவேந்தா்கள், கல்லூரி முதல்வா்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா். போட்டிகள் தொடா்பான விளக்கப் பாடல்கள் மற்றும் தகவல் குறிப்புகள் மேற்கண்ட இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. இதனை அவரவா் கல்வி நிறுவனங்களின் இணையதள பக்கத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment