கலை, அறிவியல் கல்லூரிகளில் வரும் 4-ந் தேதி முதல் நேரடி வகுப்பு தொடக்கம்! கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவு!! - Daily Dhuniya

Breaking

Friday, October 1, 2021

கலை, அறிவியல் கல்லூரிகளில் வரும் 4-ந் தேதி முதல் நேரடி வகுப்பு தொடக்கம்! கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவு!!

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்.4-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கல்லூரிக் கல்விஇயக்குநரகத்தின் கீழ் 143 அரசுகலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. நடப்பாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை சமீபத்தில் நிறைவு பெற்றது. இதற்கிடையே, கரோனா பாதிப்பு குறைந்து வந்ததால், 2-ம் மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த செப்.1-ம் தேதி சுழற்சி முறையில் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகளைத் திறந்து வகுப்புகளைத் தொடங்க உத்தரவிடப் பட்டுள்ளது. இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்குநர் சி.பூர்ணசந்திரன், அனைத்து இணை இயக்குநர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: புத்தொளிப் பயிற்சி 2021-2022-ம் கல்வியாண்டின் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்களுக்கு அக்.4-ம் தேதிமுதல் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வகுப்புகள் தொடங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும். புதிதாகச் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தொளிப் பயிற்சி வழங்க முதல்வர்கள் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். இதுதொடர்பாக அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளுக்கு இணை இயக்குநர்கள் உரிய அறிவுரை வழங்கவேண்டும். தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் (18 வயது பூர்த்தியான) தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். அதேபோல முகக்கவசம் அணியவும், சமூகஇடைவெளியைத் தவறாமல்பின்பற்றவும் அறிவுறுத்தவேண் டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

No comments:

Post a Comment