அக்னி பாதை திட்டம் | ராணுவ காவல்துறையில் சேர தமிழக இளம் பெண்கள் விண்ணப்பிக்கலாம் - Daily Dhuniya

Breaking

Tuesday, August 9, 2022

அக்னி பாதை திட்டம் | ராணுவ காவல்துறையில் சேர தமிழக இளம் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

அக்னி பாதை திட்டத்தில் ராணுவ காவல் துறையில் சேர தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்னி பாதை திட்டத்தின் கீழ் அக்னி வீரர்களை தேர்வு செய்யும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தில் ராணுவ காவல் துறையில் சேர தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் https://joinindianarmy.nic.in/ என்ற இணையதளத்தில் இன்று (ஆகஸ்ட் 9) முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இவர்களுக்கான நேரடி ஆட்கள் தேர்வு முகாம் நவம்பர் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை வேலூர் காவல் துறை பள்ளியில் நடைபெறுகிறது

No comments:

Post a Comment