இல்லம் தேடி கல்வி திட்டம்; ஊக்கத்தொகை நிறுத்தம் - Daily Dhuniya

Breaking

Wednesday, August 17, 2022

இல்லம் தேடி கல்வி திட்டம்; ஊக்கத்தொகை நிறுத்தம்

'இல்லம் தேடி கல்வி திட்டம்' தன்னார்வலர்களுக்கு, மே முதல் ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலால், இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு, 'ஆன்லைனில்' பாடங்கள் நடத்தப்பட்டன. இதனால் பல குழந்தைகளுக்கு கற்றல் திறன் பாதிக்கப்பட்டது.அந்த குறைபாட்டை களையும் பொருட்டு, 2021 அக்டோபரில், இல்லம் தேடி கல்வி திட்டத்தை, அரசு அறிமுகம்

செய்தது.இதன் வாயிலாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் வீடு தேடி சென்று தன்னார்வலர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர். இதற்காக மாநில அளவில், 11 ஆயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு, மாதம் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இந்த ஊக்கத்தொகை, மே மாதத்தில் இருந்து தன்னார்வலர்களுக்கு வழங்கப்படவில்லை.தன்னார்வலர்கள் கூறியதாவது:சேவை நோக்கில் தான் இப்பணியை செய்கிறோம். இருந்தாலும், அரசு உறுதியளித்த ஊக்கத் தொகையை, மே மாதத்தில் இருந்து வழங்கவில்லை. அவற்றை குறித்த காலத்தில் வழங்காமல் தாமதம் செய்வது நியாயமல்ல.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment