ராணுவத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு முகாம் - தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு - Daily Dhuniya

Breaking

Wednesday, August 17, 2022

ராணுவத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு முகாம் - தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு

ராணுவத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு முகாம் நவ., 15ல் துவங்குகிறது.

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அக்னிபாதை திட்டத்தின் கீழ், ராணுவத்தில் கிளார்க், ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன், தொழில்நுட்பம் மற்றும் பொதுப் பணி ஆகிய காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான முகாம், நவ., 15 முதல் 25 வரை நடக்கிறது.

வேலுாரில் உள்ள காவலர் தேர்வு பள்ளியில் நடக்கும் இந்த முகாமில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, கடலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.

விண்ணப்பதாரர்கள் 'ஆன்லைன்' மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக, வரும் செப்., 3 வரை விண்ணப்பிக்கலாம்.

இந்த ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்பதற்கான அனுமதிச் சீட்டு, விண்ணப்பதாரர்களின் இ- - மெயில் முகவரிக்கு, செப்., 1 முதல் அனுப்பி வைக்கப்படும்.

No comments:

Post a Comment