நீட் அல்லாத படிப்புகளுக்கு 13,968 பேர் விண்ணப்பம்: சென்டாக் கவுன்சிலிங் மெரிட் லிஸ்ட் தயாரிப்பு பணி மும்முரம்! - Daily Dhuniya

Breaking

Wednesday, August 17, 2022

நீட் அல்லாத படிப்புகளுக்கு 13,968 பேர் விண்ணப்பம்: சென்டாக் கவுன்சிலிங் மெரிட் லிஸ்ட் தயாரிப்பு பணி மும்முரம்!

நீட் அல்லாத படிப்புகளுக்கு 13,968 பேர் விண்ணப்பம்: சென்டாக் கவுன்சிலிங் மெரிட் லிஸ்ட் தயாரிப்பு பணி மும்முரம்!

புதுச்சேரி மாநிலத்தில் கலை மற்றும் அறிவியல் படிப்புகள், தொழிற்கல்வி, நுண்கலையியல், லேட்ரல் என்ட்ரி பி.டெக்., உயிரியல் சார்ந்த டிப்ளமோ படிப்பு என, நீட் மதிப்பெண் அல்லாத படிப்புகளில் மொத்தம் 10,804 இடங்கள் உள்ளன.

இந்த படிப்புகளுக்கு கடந்த ஜூலை 8ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை, சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

பிளஸ் 2 முடித்த மாணவ மாணவிகள், கல்வி மற்றும் வருவாய் துறை சான்றிதழ்களை இணைத்து ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். 13,968 பேர் விண்ணப்பம்.

'நீட்' மதிப்பெண் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, 16,820 பேர் ஆன்-லைனில் பதிவு செய்திருந்தனர்.

அவர்களில் 13,968 பேர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, சமர்ப்பித்து உள்ளனர்.

கலை படிப்புகளுக்கு மட்டும் 4,568 பேரும், தொழில் படிப்புகளுக்கு 5,683 பேர், கலை மற்றும் தொழில் படிப்புகளுக்கு இணைந்து 3,717 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

விண்ணப்பித்துள்ள 13,968 மாணவர்களில், 11,051 பேர் புதுச்சேரியை சேர்ந்தவர்கள். 2,950 பேர் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

இதுதவிர, என்.ஆர்.,-3, என்.ஆர்., ஸ்பான்சர்டு-3 பேர் விண்ணப்பித்துள்ளனர்

No comments:

Post a Comment