கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் ஈச்சனாரியில் வரும் 18-ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வரும் 18-ம் தேதி ஈச்சனாரி, ரத்தினம் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் உற்பத்தி துறை, ஜவுளி, பொறியியல், ஐ.டி. துறை, கட்டுமானம், ஆட்டோமொபைல்ஸ், விற்பனை, மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உட்பட 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
முகாமில் கலந்துகொள்வோர் தங்களது சுயவிவரம், கல்வி சான்று நகல்களுடன் பங்கேற்க வேண்டும். பங்கேற்க வயது வரம்பு இல்லை. தேர்வு செய்யப்படுவோருக்கு அன்றே பணி நியமன ஆணை வழங்கப்படும். நியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது. முகாமில், பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடும் மனுதாரர்கள் Www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில், விவரங்களை பதிவு செய்ய வேண்டும். கலந்துகொள்ள அனுமதி இலவசம். கூடுதல் விவரங்களுக்கு 9499055938 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment