ஆவினில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு அழைப்பு - நேர்காணல் நாள் 11.08.2022 - Daily Dhuniya

Breaking

Tuesday, August 9, 2022

ஆவினில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு அழைப்பு - நேர்காணல் நாள் 11.08.2022

ஆவினில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு அழைப்பு.

தஞ்சாவூர் ஆவினில் காலியாக உள்ள 3 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்துக்கு, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள், ஆக..11ம் தேதி நடைபெறும் நேர்காணல் தேர்வில் பங்கேற்கலாமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள் எண்ணிக்கை :

கால்நடை மருத்துவ ஆலோசகர் - 3

சம்பள விகிதம் :

ரூ.43,000/- ( அடிப்படை சம்பளம் ரூ.30,000 + பிற ஊக்கத்தொகை சேர்த்து) கல்வித்தகுதி : இளங்கலை கால்நடை அறிவியல் படிப்பு (பி.வி.எஸ்.சி) முடித்திருக்க வேண்டும். கணினியை இயக்க தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருப்பதுடன், உரிய ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

தொடர்பு எண்கள் :

04362 - 255379 / 9385679098

நேர்காணல் நடைபெறும் இடம் :

நிர்வாக அலுவலகம், தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட், நாஞ்சிக்கோட்டை ரோடு, தஞ்சாவூர்-6.

நாள் & நேரம் :

11.08.2022, காலை 11 மணி.

No comments:

Post a Comment