முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பி யுள்ள கோரிக்கை மனு விபரம்.
தமிழக அரசின் துரித செயல்பாடுகளால் கொரோனாதொற்றுகட் டுக்குள் வந்த பிறகு, அரசி னுடைய அறிவிப்பின்படி தமிழகத்தில் கடந்த செப் டம்பர் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. பொங்கல் பண்டிகைக்குள் அனைத்து பாடங்களை யும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு நடத்தி முடித்துவிட வேண் டும் என்று பள்ளிக்கல்வி இணை இயக்குநர்கள் அறி வுறுத்தியுள்ளனர்.
இவ்வாறு பள்ளிக ளில் ஆசிரியர்கள் பாடங் களை நடத்தி முடித்த பிறகு மாணவர்கள் நலன் பாதிக்காத வகையில் ஆசிரியர் பொது மாறுதல்
கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும்.
பொது மாறுதல் கலந்தாய்வில் முதலில் முதுகலை ஆசிரி யர்களுக்கு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரி யர்களாக பதவி உயர்வு அளிக்கும் கலந்தாய்வை முதலில் நடத்த வேண்டும்.
அதற்குப் பிறகு முது கலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுத லும், தொடர்ந்து மாவட் டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வை யும் நடத்த வேண்டும். ஜாக்டோஜியோபோராட் டத்தில் ஈடுபட்டதால் கட் டாய பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் களுக்கு வரும் கலந்தாய் வில் சிறப்பு முன்னுரிமை வழங்க வேண்டும்.
முந்தைய ஆண்டில் பணி நிரவலால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு கலந்தாய்
வில் முன்னுரிமை வழங் கப்பட வேண்டும்.
பொது மாறுதல் கலந் தாய்வு முன்னுரிமைப் பட்டியலில் கொரோனா தொற்றால் துணையை இழந்த ஆசிரியை, ஆசிரி யர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். ஆசி ரியர் தற்போது பணிபுரி யும்பள்ளியில் ஒரு ஆண்டு பணி புரிந்திருந்தாலே போதும் என்ற விதியை அறிவிக்க வேண்டும். உள் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டத்திற்கு மனமொத்த மாறுதலில் செல்லும் ஆசிரியர்கள் தற்போது பணியாற்றும் பள்ளியில் ஓர் ஆண்டு பணிபுரிந்த இருந்தாலே போதும் என்ற விதியை அறிவிக்க வேண்டும். பொது மாறுதல் கலந் தாய்வு பல்லாயிரக்க ணக்கான ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில்
நடத்தப்பட வேண்டும். மேலும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2025 ஜனவரி கடைசி வாரத்தில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்திலோ உறுதியாக நடத்த வேண்டும். வரும் மே மாதத்தில் 10 மற் றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நிச்சய மாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருக் கிறார்.
மே மாதம் முழுவதும் பொதுத் தேர்வு நடை பெற்று முடிந்ததும் ஜூன் மாதம்முழுவதும் விடைத் தாள் திருத்தும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுவார் கள்.
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கலந்தாய் வில் பெரும்பாலான ஆசி ரியர்கள் பலன் பெற்றிடும் வகையில் அவர்களின் கோரிக்கைக்கு இணங்க புதிய விதிகளை உருவாக்ச வேண்டும். இவ்வாறு ராமு தெரிவித்துள்ளார்.
Sunday, December 26, 2021
Home
Counselling
Teacher's
Transfer
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்த அமைச்சருக்கு மனு
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்த அமைச்சருக்கு மனு
Tags
# Counselling
# Teacher's
# Transfer
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
Transfer
Tags:
Counselling,
Teacher's,
Transfer
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment