கல்வியோடு இயற்கை வேளாண்மையில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தி வருகின்றனர். அவர்கள் விளைவித்த காய்கறிகள் மதிய உணவு திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. அரியலூர் மாவட்டம் சோழன்குடிக்காடு கிராமத்தில் செயல்படும் அரசு உயர்நிலைப்பள்ளியில் அரசு வழிகாட்டுதல்படி 2021-2022 கல்வியாண்டில் இயற்கை முறையில் மூலிகை மற்றும் காய்கறி தோட்டம் அமைத்து கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், அவரைக்காய், பீர்க்கங்காய், சுரக்காய் புடலங்காய், பூசணிக்காய், பரங்கிக்காய், நாட்டுத்தக்காளி, முத்துசோளம், மிளகாய் மற்றும் கீரை வகைகள் ஆகியவற்றை விளைவித்து அசத்தி வருவதோடு பள்ளியில் நடைபெறும் மதிய உணவு திட்டத்திற்கு பள்ளியில் விளைந்த காய்கறிகளை வழங்கி பள்ளி மாணவ, மாணவிகளின் ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றனர்.
இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறியது, எங்கள் மாணவ, மாணவிகள் கல்வியோடு சேர்த்து இயற்கை உரங்களை இட்டு காய்கறிகள் மற்றும் மூலிகைகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வமாய் இருந்தனர். தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அவர்களை ஊக்கப்படுத்தினோம். அதன்படி எங்கள் பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளின் உழைப்பிலும் அர்பணிப்பிலும் விளைந்த காய்கறிகளை காணும் போது மிக மகிழ்ச்சியாக உள்ளது என்றனர். சுயசார்பு, தன்னம்பிக்கை, இயற்கை காத்தல் போன்ற செயல்திறனை வளர்த்துக்கொள்ளும் சோழன்குடிக்காடு உயர்நிலைப் பள்ளியை பொதுமக்களும் பெரிதும் பாரட்டுகின்றனர்.
Sunday, December 19, 2021
கல்வியோடு இயற்கை வேளாண்மையில் அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்
Tags
# Education
# Students
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
Students
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment