படிக்க வசதி இல்லாத மாணவிக்கு கல்லூரியில் இடம் - Daily Dhuniya

Breaking

Friday, October 29, 2021

படிக்க வசதி இல்லாத மாணவிக்கு கல்லூரியில் இடம்

மதுரை மாவட்டம், திருவேடகம் கிராமத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஷோபனா, கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு பண வசதியில்லாமல் இருப்பதாக முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

மாணவியின் கடிதத்தை கனிவுடன் பரிசீலித்து, ஷோபனாவிற்கு மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் பி.பி.ஏ. பட்டப்படிப்பு பயில முதல்வர் ஏற்பாடு செய்தார். முதல்வரை சென்னையில் நேரில் வந்து சந்தித்து நன்றி தெரிவிப்பதற்கு தன்னிடம் பணவசதி இல்லை என்றும் முதல்வருக்கு கடிதம் மூலம் தெரிவித்தார்.

இந்நிலையில், முதல்வர் நேற்று மதுரைக்கு வந்த போது, அரசு வாகனத்தை திருவேடகம் கிராமத்திற்கு அனுப்பி வைத்து, மாணவி ஷோபனா மற்றும் அவரது பெற்றோரை மதுரை அரசு விருந்தினர் மாளிகைக்கு வரவழைத்து, மாணவிக்கு பட்டப் படிப்பிற்கான புத்தகங்கள், புத்தகப்பை, கல்வி உபகரணங்கள் மற்றும் நிதியுதவி வழங்கி, வாழ்த்தினார். நிகழ்வின் போது வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உடன் இருந்தார்.

No comments:

Post a Comment