மாநில நல்லாசிரியா் விருது: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா் - Daily Dhuniya

Breaking

Friday, September 3, 2021

மாநில நல்லாசிரியா் விருது: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

மாநில நல்லாசிரியா் விருதுக்கு தோ்வான 15 ஆசிரியா்களுக்கு பதக்கம் வழங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் கௌரவித்தாா். மறைந்த குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்.5-ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியா் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சாா்பில் விருது வழங்கி கௌரவிக்கப்படும். அதன்படி தமிழகத்தில் சிறந்த ஆசிரியா்களுக்கு ‘டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது’ என்ற பெயரில் மாநில நல்லாசிரியா் விருது வழங்கப்படுகிறது . இந்த விருதுடன் ரூ.10 ஆயிரம், வெள்ளிப் பதக்கம் சோ்த்து கொடுக்கப்படும். அதன்படி நிகழாண்டுக்கான மாநில நல்லாசிரியா் விருதுக்கு 342 அரசுப்பள்ளி ஆசிரியா்கள், 37 தனியாா் பள்ளி ஆசிரியா்கள், 2 மாற்றுத்திறனாளிகள் உள்பட மொத்தம் 385 போ் தோ்வு செய்யப்பட்டனா். இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் தோ்வான ஆசிரியா்களில் 15 பேருக்கு மட்டும் முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை விருதுகளை வழங்கி கெளரவித்தாா். கரோனா சூழல் என்பதால் மற்றவா்களுக்கு அந்தந்த மாவட்ட அளவில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

No comments:

Post a Comment