பள்ளி, கல்லூரிகளில் 1 மணி நேரம் விளையாட்டு - விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் - Daily Dhuniya

Breaking

Friday, September 3, 2021

பள்ளி, கல்லூரிகளில் 1 மணி நேரம் விளையாட்டு - விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்

"பள்ளி, கல்லூரிகளில் ஒரு மணி நேரம் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் கூறினாா். சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் பேசியது: பள்ளிகளில் விளையாட்டு என்பதே இல்லாமல் போய்விட்டதாக உறுப்பினா்கள் கூறினாா்கள். பள்ளிக் கல்வித் துறை, உயா் கல்வித் துறை அமைச்சா்களோடு கலந்து ஆலோசித்து பள்ளி, கல்லூரிகளில் ஒரு மணி நேரம் மாணவா்களை விளையாட்டுத் திடலுக்கு கொண்டு வருவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். ஒலிம்பிக்கில் 50 வீரா்கள்: 2024 ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தின் சாா்பில் 50 வீரா்களையாவது அனுப்ப வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என்றாா்."

No comments:

Post a Comment