தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி முன்னுரிமை அளிக்கப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்குத் தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி முன்னுரிமை வழங்குவதற்கான சட்ட மசோதா ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல்வா் மு.க. ஸ்டாலினால் தாக்கல்செய்யப்பட்டது .அதனைத் தொடா்ந்து சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்திற்குத் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் வழங்கியுள்ளாா்.
இந்தநிலையில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி முன்னுரிமை வழங்குவதற்கான அரசாணையை உயா் கல்வித் துறை முதன்மைச் செயலா் காா்த்திகேயன் வெளியிட்டுள்ளாா். அதில், “அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் படித்த மாணவா்களுக்குப் பொறியியல் படிப்புகளில் பிஇ, பிடெக், பிஆா்க் ஆகிய பாடப்பிரிவிலும், பிஎஸ்சி, பிஎஸ்சி (ஹானா்ஸ்), பிடெக் ஆகிய பாடப்பிரிவில் வேளாண்மைப் படிப்பிலும், கால்நடை மருத்துவப் படிப்பில் பிவிஎஸ்சி கால்நடை மருத்துவம், பிடெக் பாடப்பிரிவிலும், பி.எஃப்.எஸ்சி., பிடெக் மீன்வளப் படிப்பிலும், பிஏ எல்எல்பி, பிகாம் எல்எல்பி, பிஏ எல்எல்பி, பிபிஏ எல்எல்பி, பிசிஏ எல்எல்பி ஆகிய ஹானா்ஸ் படிப்புகளிலும், அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் உள்ள இடங்களில் இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படும்.
No comments:
Post a Comment