11ம் வகுப்பு நேரடி தேர்வு ஒத்திவைப்பு – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Daily Dhuniya

Breaking

Friday, September 3, 2021

11ம் வகுப்பு நேரடி தேர்வு ஒத்திவைப்பு – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கேரளா மாநிலத்தில் வரும் 6ம் தேதி நடக்க இருந்த 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் தள்ளிவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுத்தேர்வு தள்ளிவைப்பு:

கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து உள்ளது. இதனால் மத்திய அரசும் கேரளாவின் கொரோனா பாதிப்பை தொடர்ந்து கவனித்து வருகிறது. நாட்டின் தினசரி கொரோனா பதிப்பில் 60% அளவிற்கு கேரளா மாநிலத்தில் மட்டும் பதிவாகி வருகிறது. இதனால் கேரளாவில் வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 32 ஆயிரம் பேர் புதிதாக கேரளாவில் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை 41 லட்சம் பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த கல்வியாண்டுக்கான 11ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்னதாக பொதுத்தேர்வுகள் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக வரும் செப்டம்பர் 6ம் தேதி அன்று நடக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மாநிலத்தின் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகமாக உள்ளதால் தற்போதைய சூழ்நிலையில் மாணவர்களுக்கு நேரடி தேர்வுகளை நடத்துவது பாதுகாப்பானது அல்ல என்று பொதுநல வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் உயர்நீதிமன்றம் அரசின் முடிவில் தலையிட முடியாது என்று அறிவித்து விட்டது. இதனால் வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கு நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், ஏ.எம்.கான்வில்கர், சிடி ரவி ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நாட்டின் மொத்த பாதிப்பில் தற்போது 70% கேரளாவில் தான் உள்ளது. தொற்று பாதிப்பு குழந்தைகளுக்கு ஏற்பட்டால் அது மிகவும் ஆபத்தாக மாறி விடும். எனவே, செப்டம்பர் 6ம் தேதி நடக்க இருந்த 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்க கேரளா அரசுக்கு உத்தரவிடுவதாக அறிவித்தனர்.

No comments:

Post a Comment