இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கொளத்தூரில் தொடங்கப்படும் கல்லூரிக்கு விண்ணப்பம்: 50 பேருக்கு அமைச்சர் அளித்தார்
கொளத்தூர் தொகுதியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தொடங்கப்படும் கல்லூரிக்கு விண்ணப்பப் படிவங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் நேரில் வழங்கினார். 50 மாணவ, மாணவிகள் பெற்றுக்கொண்டனர். அறநிலையத்துறை சார்பில் புதிதாக 4 கல்லூரிகள் தொடங்கப்படும் என சமீபத்தில் அறநிலை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி. சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் எவர்வின தனியார் பள்ளியில் தனியாக ஒரு கட்டிடத்தை தற்காலிகமாக கல்லூரிக்கு பயன்படுத்திக்கொள்ள முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற் கட்டமாக நேற்று மாலை கொளத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு எவர்வின் பள்ளி கட்டிடத்தில் விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டது. இதில் அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு முதல் விண்ணப்பத்தை கொளத்தூர் டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்த முருகவேணி என்ற மாணவிக்கு வழங்கினார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது விண்ணப்பத்தை குஷ்னா பார்த்தியா என்ற இஸ்லாமிய பெண் பெற்றுக்கொண்டார். நேற்று மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று கொண்டனர். மொத்தம் 240 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
அதிகப்படியான விண்ணப்பப்படிவங்கள் வரும்பட்சத்தில நேர்முகத்தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கபாலீசுவரர் கோயில் இணை ஆணையர் காவேரி, தக்கார் விஜயகுமார் ரெட்டி, எவர்வின் பள்ளி குழுமத்தின் முதல்வர் புருஷோத்தமன், கொளத்தூர் தொகுதி செயலாளர் நாகராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

No comments:
Post a Comment