தமிழக அரசு சார்பில் ‘வீடு தேடி பள்ளிகள்’ திட்டம் – கல்வித்துறையில் அடுத்த அதிரடி! - Daily Dhuniya

Breaking

Thursday, September 30, 2021

தமிழக அரசு சார்பில் ‘வீடு தேடி பள்ளிகள்’ திட்டம் – கல்வித்துறையில் அடுத்த அதிரடி!

தமிழகத்தில் மாணவர்களின் வீட்டிற்கு ஆசிரியர்கள் சென்று 2 மணிநேரம் பாடம் நடத்தும் வகையில் ‘வீடு தேடி பள்ளிகள்’ என்கிற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வீடு தேடி பள்ளிகள்: தமிழகத்தில் கொரோனா 2வது அலை குறைந்து வருவதை தொடர்ந்து செப்1ம் தேதி 9 – 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதன் பின்னர் மாணவர்கள், ஆசிரியர்கள் என கொரோனா தொற்றால் பாதித்திருந்தாலும், அவ்வாறு பாதிக்கப்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு மற்ற பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின. தற்போது முறையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் சரியான முறையில் இயங்கி வருகின்றன. இதனை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக தொடக்க பள்ளிகளை திறப்பதற்கு முதலமைச்சர், கல்வி அமைச்சர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர்களால் ஆலோசனைகள் நடத்தப்பட்டது.
இவ்வாறு பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு மத்திய அரசின் பாதுகாப்பு நெறிமுறைகளான தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது, கைகளை கழுவுவது போன்றவற்றை பின்பற்றி பள்ளிகளை நவம்பர் 1ம் தேதி திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து கற்றல் இடைவெளியை போக்கும் விதமாக எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அவர்களது வீட்டிற்க்கே சென்று ஆசிரியர்கள் 2 மணிநேரம் பாடம் நடத்துமாறு தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வாறு அவர்கள் பணி செய்வதை தொடக்க கல்வி அலுவலர்கள் கண்காணிப்பார்கள்.
பள்ளிகள் திறக்க அறிவிப்பு வந்துள்ள இந்நிலையில் இப்படி ஒரு புதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தெளிவுபடுத்தும் விதமாக, பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பதற்கு முன்னதாக அக்டோபர் மாதமே, வீடு தேடிச் சென்று பாடம் நடத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கின்றன. பள்ளிகள் திறந்த பிறகும் மாலை நேரத்தில் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment