மாணவர்களுக்கு : ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி : அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிப்பு
சட்டப்பேரவையில் நேற்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசியபோது அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழகத்தில் உள்ள 259 பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் நலத்துறை கல்லூரி விடுதிகளில் ரூ.2 கோடியே 59 லட்சம் செலவில் செம்மொழி நூலகம் ஏற்படுத்தப்படும். அந்தக்கல்லூரிகளுக்கு ரூ.1 கோடியே 44 லட்சம் செலவில் உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும். 40 விடுதிகளுக்கு ரூ.10 லட்சம்செலவில் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் வழங்கப்படும்.
கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் தனித்திறன் மற்றும்ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும். பிசி, எம்பிசி, சீர்மரபினர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வருமான வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்படும். கல்வி உதவித்தொகை திட்டங்களில் பயன்பெற முதல் பட்டதாரி என்பதற்கு பதிலாக முதல் தலைமுறை பட்டதாரி என்று நிபந்தனையில் மாற்றம் செய்யப்படும்.
இலவச தையல் இயந்திரம்
கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்துக்கான வருமான வரம்பு ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிசி, எம்பிசி,மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம், இலவச பித்தளை தேய்ப்புபெட்டி (இஸ்திரி பெட்டி) வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment