முதுநிலை பட்டப் படிப்பு:
கொரோனா பேரிடர் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் இளங்கலை பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்று முதுநிலை கல்வி தொடர நினைக்கும் மாணவர்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2021 – 22 ஆம் கல்வி ஆண்டில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான முதுநிலை பட்டபடிப்பிற்கான சேர்க்கைக்கு ஆகஸ்ட் 10ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில் நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
ஆர்வமுடைய மாணவர்கள் அரசு / அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி மற்றும் கலைக்கல்லூரிகள்/ அண்ணா பல்கலைக்கழகம்/ துறைகள் (University Departments) / வட்டார மையங்கள் /அண்ணாமலை பல்கலைக்கழகம் / சென்னை பல்கலைக்கழகம் / இதர பல்கலைக்கழகங்கள் / சுய நிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ மாற்று எம்.சி.ஏ. முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க ஆர்வமுடைய மாணவர்கள் தேவையான சான்றுகளுடன் http://www.gct.ac.in / http://www.tn-mbamca.com என்னும் முகவரியை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில் எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ போன்ற முதுநிலை படிப்பிற்கு தனித்தனியாக விண்ணப்பிப்பது அவசியமாகும். மாணவர்கள் 11.08.2021 முதல் 31.08.2021 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் தங்களது விண்ணப்ப கட்டணத்தை Debit Card, Credit Card அல்லது Net Banking மூலம் செலுத்திய பின்னர் ஆன்லைன் மூலம் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment