தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு – மத்திய அரசுக்கு கோரிக்கை - Daily Dhuniya

Breaking

Friday, August 6, 2021

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு – மத்திய அரசுக்கு கோரிக்கை

இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்கு மத்திய அரசால் நடத்தப்படும் நீட் என்னும் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ரா.சரத்குமார் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

நீட் தேர்வு :
இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனும் நுழைவுத்தேர்வு மத்திய அரசால் நடத்தப்படுகிறது. இந்த நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என முக ஸ்டாலின் தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். அதன்படி நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்தார். மேலும் பிரதமரை நேரில் சென்று சந்தித்து நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.

ஆனாலும் மத்திய அரசு தமிழக அரசின் கோரிக்கையை ஏற்கவில்லை. தற்போது நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. மேலும் வினாத்தாள்களும் மாற்றியமைக்கப்பட்டு வரும் செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு இந்தியா முழுவதும் நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்த அச்சம் நிலவி வருகிறது. இதனால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ரா.சரத்குமார் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அகில இந்திய தொகுப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 15% இடங்களுக்கு அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தி கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். மேலும் மக்களின் விருப்பமே அரசின் செயல்பாடாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், மத்திய அரசு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும். மருத்துவ படிப்பில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட 85% இடங்களுக்கு மாநில அளவில் நுழைவுத்தேர்வு நடத்தி கொள்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment