ஆகஸ்ட் 16 முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறப்பு –ஒடிசா மாநில அரசு அறிவிப்பு! - Daily Dhuniya

Breaking

Friday, August 6, 2021

ஆகஸ்ட் 16 முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறப்பு –ஒடிசா மாநில அரசு அறிவிப்பு!

ஆகஸ்ட் 16 முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

மாநிலம் முழுவதுமான கொரோனா பாதிப்புகளின் நிலவரத்தை ஆய்வு செய்த பின்னர் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உட்பட உயர்கல்வி நிறுவனங்களை ஆகஸ்ட் 16 முதல் மீண்டுமாக திறக்க ஒடிசா மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கல்லூரிகள் திறப்பு
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பாதிப்புகள் குறைந்து வருவதையடுத்து மாநிலங்கள் தோறும் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சில மாநிலங்களில் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் ஒடிசா மாநிலத்திலும் கொரோனா புதிய பாதிப்புகளானது வீழ்ச்சியடைந்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் கல்வி நிறுவனங்களை மீண்டுமாக திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநில உயர்கல்வித்துறை ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘ஒடிசா மாநிலத்தில் உயர் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் முதுகலை முதல் ஆண்டு மற்றும் இளங்கலை இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வரும் 16 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் துவங்கும்’ என்று தெரிவித்துள்ளது.

அரசு திட்டமிட்டபடி இளங்கலை மற்றும் முதுகலை இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஒடிசா மாநில அரசு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஷாப்பிங் மால்கள், பூங்காக்கள் மற்றும் சினிமா அரங்குகளை மீண்டும் திறப்பதாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 26 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. தவிர ஆகஸ்ட் 16 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை மீண்டும் திறக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment