தமிழக தொடக்க கல்வி பட்டயத் தேர்வு – இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு! - Daily Dhuniya

Breaking

Saturday, August 7, 2021

தமிழக தொடக்க கல்வி பட்டயத் தேர்வு – இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!

தொடக்க கல்வி பட்டயத் தேர்வு முதலாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலும் இரண்டாம் ஆண்டு தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையும் தேர்வு நடைபெற இருப்பதால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் வரவேற்பு:
தமிழகத்தில் தொடக்க கல்வி பட்டயத் தேர்வு நடக்கவிருக்கும் நிலையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு தொடக்க கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமாக இருக்கும் தனித்தேர்வர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுடைய மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு கட்டண விவரம் ஆகியன தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

முதலாம், இரண்டாம் ஆண்டு தொடக்க கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in எனும் இணையதள முகவரியை பயன்படுத்தி மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் இணைத்து தேர்வு கட்டணம் மற்றும் விண்ணப்பங்களை ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முதலாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலும் இரண்டாமாண்டு தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண விவரம்:
ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50/-
மதிப்பெண் சான்றிதழ் (முதலாமாண்டு) ரூ.100/-
மதிப்பெண் சான்றிதழ் (இரண்டாமாண்டு) ரூ.100/-
பதிவு மற்றும் சேவை கட்டணம் ரூ.15/-
ஆன்லைன் பதிவு கட்டணம் (ஒரு விண்ணப்பத்திற்கு) ரூ. 50/-

No comments:

Post a Comment