தொலைதூர கல்வி:
தமிழகத்தில் எல்லோருக்கும் எப்போதும் கல்வி என்ற நோக்கில் தொலைதூர கல்வி இயக்கம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் அனைத்து வயதினரும் கல்வி கல்வி பெறும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த தொலைதூர கல்வி திட்டத்தால் பணிக்கு செல்வோரும் பகுதி நேரம் கல்வி பயின்று வருகின்றனர். தொலைதூர கல்வி கலை மற்றும் அறிவியல் பாடங்களை தொடர்ந்து சட்டப் படிப்பும் உள்ளது. தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 2 மற்றும் 3 ஆண்டு சட்டப் படிப்புகளை தொலைதூர கல்வி மூலம் வழங்குகிறது.
அங்கீகாரம் இல்லாமல் தொலைதூர சட்ட கல்வியியல் சட்ட கல்வி கற்பிப்பதாக கூறி வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் அண்ணா பல்கலைக்கழகம் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில், தொலைதூரக் கல்வி மூலம் சட்டப் படிப்பு வழங்க அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு அங்கீகாரம் கிடையாது என இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.
மேலும் இதற்கான எந்த உரிமையையும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்கல்வித்துறை வழங்கவில்லை எனவும் குறிப்பிட்டது. சட்டப்படிப்பை வழங்குவதற்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு எந்த அனுமதி இல்லை என்று யுஜிசியும் விளக்கமளித்துள்ளது. இந்த நிலையில் தொலைதூரக் கல்வியில் சட்டப் படிப்பு பயின்றால் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து ஆகஸ்ட் 13ம் தேதி மாலை 4.30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment