சிமெண்ட் டெக்னாலஜி படிப்பு - Daily Dhuniya

Breaking

Sunday, August 21, 2022

சிமெண்ட் டெக்னாலஜி படிப்பு

சிமெண்ட் டெக்னாலஜி படிப்பு

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் செயல்படும் நேஷனல் கவுன்சில் பார் சிமெண்ட் அண்டு பில்டிங் மெட்டீரியல்ஸ் எனும் நிறுவனத்தில் ஓர் ஆண்டு முதுநிலை டிப்ளமா படிப்பு வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் இந்நிறுவனம், சிமெண்ட் மற்றும் கட்டுமான துறைகளில் ஆராய்ச்சி, மேம்பாடு, தொழில்நுட்ப பகிர்வு, ஆலோசனை மற்றும் பயிற்சி ஆகியவற்றை வழங்குவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

பரிதாபாத் மட்டுமின்றி, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களிலும் இந்நிறுவனத்தின் வளாகங்கள் செயல்படுகின்றன.

சிமெண்ட் மற்றும் கட்டுமானத்துறையில், மனிதவளத்தை மேம்படுத்தும் வகையில் பரிதாபாத் வளாகத்தில் ஓர் ஆண்டு டிப்ளமா படிப்பு வழங்கப்படுகிறது. படிப்பு: போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் சிமெண்ட் டெக்னாலஜி

தகுதி: பி.இ., / பி.டெக்., படிப்பு நிலையில் கெமிக்கல் இன்ஜினியரிங் / சிமெண்ட் டெக்னாலஜி படித்திருக்க வேண்டும் அல்லது எம்.எஸ்சி., - கெமிஸ்ட்ரி படித்திருக்க வேண்டும்.

கல்விக்கட்டணம்: அனைத்து கட்டணங்களும் உட்பட ரூ. 90 ஆயிரம்

விபரங்களுக்கு: www.ncbindia.com

No comments:

Post a Comment