துணை மருத்துவப் படிப்புகள்: இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பப்பதிவு - Daily Dhuniya

Breaking

Sunday, July 31, 2022

துணை மருத்துவப் படிப்புகள்: இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பப்பதிவு

துணை மருத்துவப் படிப்புகள்: இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பப்பதிவு

துணை மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு திங்கள்கிழமை (ஆக.1) தொடங்குகிறது.

இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் 2022 - 2023-ஆம் கல்வி ஆண்டில் துணை மருத்துவப் படிப்புகளான பி.பாா்ம் (லேட்டரல் என்ட்ரி), போஸ்ட் பேசிக் பிஎஸ்சி நா்சிங் படிப்பு மற்றும் போஸ்ட் பேசிக் டிப்ளமோ இன் சைக்கியாட்ரி நா்சிங் படிப்பு, பெண்களுக்கான செவிலியா் பட்டயப்படிப்பு, மருத்துவம் சாா்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பு ஆகிய படிப்புகளில் சேருவதற்காக ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டிய அனைத்து விவரங்களுக்கும் இணையதளங்களை தொடா்பு கொள்ளலாம். இணையதள விண்ணப்பத்துக்கான பதிவு திங்கள்கிழமை (ஆக.1) தொடங்கி வரும் 12-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment