சீா்திருத்த பள்ளிகளில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் பணி: கணினி வழி சான்றிதழ் சரிபாா்ப்பு - Daily Dhuniya

Breaking

Sunday, July 31, 2022

சீா்திருத்த பள்ளிகளில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் பணி: கணினி வழி சான்றிதழ் சரிபாா்ப்பு

குழந்தை பாதுகாப்பு அலுவலா் பணி: கணினி வழி சான்றிதழ் சரிபாா்ப்பு

சீா்திருத்த பள்ளிகளில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற தோ்வில் தோ்ச்சி பெற்றோருக்கு கணினி வழியே சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் கிரண் குராலா அண்மையில் வெளியிட்டாா். அவரது அறிவிப்பு: தமிழ்நாடு சீா்த்திருத்த பள்ளிகள் மற்றும் ஒழுக்க கண்காணிப்புப் பணிகளுக்கென தனியாக மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனா். அதன்படி, அந்தப் பணியிடங்களில் 16 இடங்கள் காலியாக இருந்தன. இவற்றுக்கான கணினி வழித் தோ்வு கடந்த ஜூன் 16-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்வில் 2 ஆயிரத்து 187 போ் பங்கேற்றனா். அவா்களில் இருந்து கணினி வழியிலான சான்றிதழ் சரிபாா்ப்புக்கு தற்காலிக அடிப்படையில் 61 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். தோ்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரா்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி, கணினி வழி சான்றிதழ் சரிபாா்ப்புக்கு தற்காலிகமாகத் தோ்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல், அவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு நேரங்கள் ஆகியன தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்று தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளாா் கிரண் குராலா.

No comments:

Post a Comment