பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் நடந்து கொண்டால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.
இதையும் படிக்க | ஆசிரியர்களுக்கு பரஸ்பர இடமாறுதல் வழங்க உத்தரவு பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், பேருந்துகளில் தாளம் போடுவது, சாலையில் கோஷமிட்டு ஊர்வலமாக செல்வது, ஒருவரைக்கொருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், பொது இடங்களில் மக்களுக்கு பல்வேறு இடையூறுகளும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகின்றன. இதனை தவிர்ப்பதற்காக, அனைத்து கல்லூரிகளுக்கும் செல்லும் பேருந்து வழித்தடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இனி வரும் காலங்களில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் யாரேனும் வன்முறையில் ஈடுபட்டாலோ, பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் நடந்து கொண்டாலோ அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கல்வியில் தங்களது முழுக்கவனத்தை செலுத்தி, நன்கு படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

No comments:
Post a Comment