பெரியார் பல்கலைக்கழக சர்ச்சை கேள்வி: ஆய்வுக் குழு நியமனம் - உயர்கல்வித்துறை உத்தரவு - Daily Dhuniya

Breaking

Monday, July 18, 2022

பெரியார் பல்கலைக்கழக சர்ச்சை கேள்வி: ஆய்வுக் குழு நியமனம் - உயர்கல்வித்துறை உத்தரவு

பெரியார் பல்கலை., வினாத்தாள் சர்ச்சை: உயர்கல்வித்துறை இணைச்செயலாளர் இளங்கோஹென்றி தலைமையில் 3 பேர் கொண்ட குழு; ஒரு மாதத்திற்குள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் - உயர்கல்வித்துறை உத்தரவு

பெரியார் பல்கலைக்கழகத் தேர்வில் கேட்கப்பட்ட சாதிய ரீதியான கேள்வி குறித்து ஆராய உயர்மட்டக் குழுவை நியமித்தது தமிழக அரசு.



சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதிய ரீதியான கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையாகி உள்ளது. முதுகலை வரலாறு 2-ம் ஆண்டு தேர்வு வினாத்தாளில், 4 சாதிப் பிரிவுகளைக் குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி? என கேள்வி இடம் பெற்றதால் கடும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.



இதையும் படிக்க | மாறுதல் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் 21.07.2022 முற்பகல் புதிய பள்ளியில் பணியில் சேர உத்தரவு.

இதுகுறித்து பெரியார் பல்கலைக்கழகம் வருத்தம் தெரிவித்திருந்த நிலையில் இன்று எதனால் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது என்பது குறித்து ஆராய உயர்கல்வித் துறை விசாரணைக் குழுவை நியமித்துள்ளது.



இக்குழுவில் உயர்கல்வித் துறை இணைச் செயலார்கள் இளங்கோ ஹென்றிதாஸ், தனசேகர் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி விஜயலட்சுமி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.



மேலும், விசாரணை அறிக்கையை ஒரு மாதத்திற்குள் சமர்பிக்க வேண்டும் எனவும் உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment