Eligible candidates can apply for the post of Tamil Nadu Open Vice Chancellor on tnou.ac.in by July 20.
Parthasarathy, who was the Vice Chancellor of the Open University, has recently retired and the work of selecting a new Vice Chancellor has begun.
தமிழ்நாடு திறந்தநிலை துணைவேந்தர் பதவிக்கு, தகுதியானவர்கள் வரும் ஜூலை 20-ம் தேதிக்குள் tnou.ac.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த பார்த்தசாரதி அண்மையில் ஓய்வு பெற்ற நிலையில், புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்யும் பணிகள் தொடக்கம்.
தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் தொடர்பான தெரிவாய்வுக்குழு அறிவிப்பு
தமிழ்நாடு அரசு அரசாணை G.O.(D) எண்.116, உயர்கல்வித் துறை (K1), நாள்:04.05.2022-இன்படி, தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான மூன்று நபர்களின் பெயர்களை மாண்புமிகு தமிழக ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக வேந்தர் அவர்களுக்குப் பரிந்துரை செய்ய பேராசிரியர்.K.பிச்சுமணி, துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அவர்கள் தலைமையில் தெரிவாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அரசாணை G.O.(M.S) எண்.187, உயர்கல்வித் துறை (K2), நாள்:14.07.2017, அறிவிப்பிற்கிணங்கக் கல்வித் தகுதியும், பணி அனுபவமும், உயரிய தகைமைப் பண்பும் கொண்ட, நேர்மைமிக்க, பொறுப்பு வாய்ந்த, மதிப்புமிகு கல்வியாளர்களிடமிருந்து, இத்தெரிவாய்வுக்குழு தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்களை வரவேற்கின்றது. துணைவேந்தராக நியமனம் பெறுபவர், மூன்றாண்டுகள் பதவி வகிப்பார். பதவிக் காலத்திற்குள் எழுபது வயதை அடைந்தால் அப்பொழுதே பணி நிறைவு பெறுவார்.
உரிய தகுதியும், அனுபவமும் வாய்ந்த, விருப்பமுள்ள விண்ணப்பதார்கள், www.tnou.ac.in என்ற இணையதள முகவரியிலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட PDF வடிவிலான விண்ணப்பப் படிவம் "துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பம், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம்" என்று உறை மேல் குறிப்பிடப்பட்டுப் மின்னஞ்சல் மற்றும் பதிவு அஞ்சல் அல்லது நேரடியாக 20.07.2022 அன்று மாலை 05.00 மணிக்குள் பின்வரும் முகவரிக்குக் கிடைக்கப்பெறவேண்டும்.
கடைசி நாள் மற்றும் நேரத்திற்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. Dr. S. Swamynathan Nodal Officer Search Committee for the selection of Vice-Chancellor, TNOU
Professor, Department of Information Science and Technology,
College of Engineering Guindy, Anna University, Chennai-600 025.
E-mail: tnouvcsc2022@gmail.com
மேலும் விண்ணப்பங்கள் தெரிவாய்வுக்குழு உறுப்பினர்களுக்கு நேரடியாக அனுப்பக்கூடாது. விண்ணப்பதாரர் இது தொடர்பாக நிர்வாகத்தை எவ்வழியேனும் அணுகினால், அவரது விண்ணப்பம் தகுதியிழக்கும்.
தலைவர், துணைவேந்தர் தெரிவாய்வுக்குழு அறிவிப்பு
CLICK HERE TO DOWNLOAD TAMIL
CLICK HERE TO DOWNLOAD ENGLISH

No comments:
Post a Comment