10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நாளை(மார்ச் 2) வெளியீடு: அமைச்சர் தகவல் - Daily Dhuniya

Breaking

Tuesday, March 1, 2022

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நாளை(மார்ச் 2) வெளியீடு: அமைச்சர் தகவல்

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நாளை(மார்ச் 2) வெளியீடு: அமைச்சர் தகவல்

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதி அட்டவணை நாளை வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கரோனா பரவல் காரணமாக கடந்து 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு முழுமையாக நடத்தப்படவில்லை. மேலும் கடந்த இரு ஆண்டுகளாக பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்தான் பெரும்பாலாக நடைபெற்றன. இந்நிலையில் 2021-22 கல்வியாண்டில் பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தார்.

இதையும் படிக்க | தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் ,இணை இயக்குநர் GOOGLE MEET வழியாக நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்த கருத்துகள்

அதன்படி, தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்றும் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதி அட்டவணை நாளை வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment