பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் தொடக்க விழா - Daily Dhuniya

Breaking

Tuesday, March 1, 2022

பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் தொடக்க விழா

பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் தொடக்க விழா

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி டி.இ.எல்.சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி திட்டத்தினை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இதையும் படிக்க | யாத்ரீகளுக்கு மானியம் - விண்ணப்பிக்க இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு

இதில் ஒரு பகுதியாக உசிலம்பட்டி பேரையூர் சாலையிலுள்ள டி.இ.எல்.சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காணொளி வாயிலாக பள்ளித் தலைமையாசிரியர் மார்க்கிரேட் கிரே சீலியா ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் தமிழக முதல்வர் மாணவிகளுக்கு பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகளை தெரிவித்தார். பின்னர் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை எடுத்துரைத்து கூறிக் கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment