அடுத்த மாதத்தில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போட திட்டம் - Daily Dhuniya

Breaking

Wednesday, October 27, 2021

அடுத்த மாதத்தில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போட திட்டம்

நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்டோர் 2ஆவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை என மத்திய அமைச்சர் கூறினார்.
நாடு முழுவதும் அடுத்த மாதத்தில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று, 10 கோடிக்கும் மேற்பட்டோர் 2ஆவது தவணை தடுப்பூசியை எடுத்துக் கொள்ளவில்லை என்வும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

100 கோடி தடுப்பூசி இலக்கை இந்தியா எட்டிய நிலையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் வேகப்படுத்துவது குறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்ரமணியன், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு முன்னதாக, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்த மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டின் கோரிக்கைகள் குறித்த மனுவை வழங்கினார். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும், செங்கல்பட்டு மற்றும் குன்னூரில் தடுப்பூசி தயாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர் வழங்கினார்.

இந்நிலையில், மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடனான ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டயவர்களில், 10 கோடிக்கும் மேற்பட்டோர் 2-வது தவணை தடுப்பூசியை எடுத்துக் கொள்ளவில்லை என்றார். எனவே, அடுத்த மாதம் சுகாதாரப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று, 2ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு, தடுப்பூசி செலுத்துவர் என்று அமைச்சர் தெரிவித்தார். இதேபோல, முதல் தவணை தடுப்பூசியையும் போடுவார்கள் என்று அவர் கூறினார். 48 மாவட்டங்களில் தகுதிவாய்ந்த மக்களில் 50 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாகவும், இந்த மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்தப்படும் என்றும் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

No comments:

Post a Comment