கள்ளர் சீரமைப்பு பள்ளி கணினி ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியீடு - Daily Dhuniya

Breaking

Thursday, October 7, 2021

கள்ளர் சீரமைப்பு பள்ளி கணினி ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் இயங்கி வரும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 2018-2019ம் ஆண்டில் ஏற்பட்ட கணினி ஆசிரியர் கிரேடு1 ( முதுநிலை) காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 2019 நவம்பரில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. கூடுதலாக 10 இடங்களும் இணைக்கப்பட்டது. இதையடுத்து, கணினி வழி போட்டித் தேர்வுகள் 2019 ஜூன் 23, 27 தேதிகளில் நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் 2019 நவம்பர் மாதம் 25ம் தேதி வெளியிடப்பட்டது.

பின்னர் 2020 ஜனவரி மாதம் சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது. மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்களின் தற்காலிக தெரிவுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல்கள், சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளை உயர்நீதி மன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களின் பேரில் அளிக்கப்பட்ட உத்தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்படுகின்றன. தகுதியுள்ள நபர்களுக்கான பணி நியமன ஆணைகள் அந்தந்த துறைகள் மூலம் வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment