பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) முக்கிய அறிவிப்பு – ரூ.10 லட்சம் வரை நிதியுதவி! - Daily Dhuniya

Breaking

Thursday, July 8, 2021

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) முக்கிய அறிவிப்பு – ரூ.10 லட்சம் வரை நிதியுதவி!

தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் பின் தங்கிய பெண்கள் முன்னேற்றத்திற்காக அமைக்கப்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 1 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும் என பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.


சுய உதவிக்குழு நிதியுதவி:

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமப்புறங்கள் மற்றும் பின் தங்கிய பகுதிகளிலும் உள்ள மக்கள் முன்னேற்றத்திற்காக பல சிறப்பு திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வரிசையில் பெண்கள் முன்னேற்றத்திற்காக மகளிர் சுய உதவிக் குழு அமைக்கப்பட்டு அதன் மூலமாக பெண்கள் சுய தொழில் செய்யவும், குழந்தைகளின் படிப்பிற்காகவும் ஒரு குறிப்பிட்ட தொகை நிதியுதவியாக வழங்கப்படும்.

இந்த திட்டம் குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, தேசிய ஊரடக வாழ்வாதார திட்டத்தின் கீழ் இனிமேல் கிராமங்களும் வளர்ச்சி அடையும். மேலும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 1 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் மூலமாக நிதியுதவி பெற சில நிபந்தனைகளையும் தெரிவித்துள்ளது. அதன்படி சுய உதவி குழுக்கள் கிராமப்புற, பழங்குடி பகுதிகளை சேர்ந்தவையாக இருக்க வேண்டும் எனவும். அந்த குழுவில் குறைந்தபட்சம் 10 முதல் அதிகபட்சமாக 15 பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகள் குறைந்தபட்சம் 5 பேர் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த சுயஉதவி குழுவிற்கு 10,000 முதல் 15,000 ரூபாய் சுற்று நிதியும், கடன் தொகை 50,000 முதல் 10 லட்சம் ரூபாய் வரையும், மேலும் அந்த கடனுக்கு ஆண்டுக்கு 7% வட்டி வசூலிக்கப்படும்.

No comments:

Post a Comment