சென்னை மாநகராட்சி ஆணையர் முக்கிய அறிவிப்பு – பொதுமக்கள் கவனத்திற்கு!
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இனி அரசுக்கு சொந்தமான இடங்களில் நோட்டீஸ் ஒட்டக் கூடாது என்று சென்னை மாநகராட்சி ஆனையர் ககன்தீப் சிங் பேடி செய்திக் குறிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளார்.
சென்னை மாநகராட்சி:
தமிழகத்தின் தலைநகரமான சென்னை ஆசியாவின் மிக நீளமான கடற்கரை, பாரம்பரியமிக்க மஹாபலிபுரம், பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகள் என்று பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. நமது நாட்டின் நான்கு பெருநகரங்களில் முக்கியமான நகரமாக சென்னை இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகாகவும் பராமரிக்கும் பொறுப்பு சென்னை மாநகராட்சியிடம் தான் உள்ளது.
மாநகரத்தை நன்றாக பாரம்பரிக்கும் பணிகளுக்கு என்று தனியாக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போல் பல வித நடவடிக்கைகளான திடக்கழிவுகளை அகற்றுதல், சாலை மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளபட்டு வருகின்றது.
இருப்பினும் ஒரு சில இடங்களில் மாநகரத்தின் அழகினை கெடுக்கும் வகையில் சிலர் நோட்டீஸ் மற்றும் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். இது குறித்த புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்தது. தற்போது இந்த தொடர்பான செய்தி அறிவிப்பு ஒன்றினை சென்னை மாநகராட்சி ஆனையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ளார். அதில் சென்னை மாநகராட்சியில் உள்ள அரசிற்கு சொந்தமான கட்டிடங்கள், அலுவலகங்கள், பாலங்கள், அரசு தூண்கள், சுவர்கள் மற்றும் பேருந்து நிறுத்த குடைகள் என்று பல இடங்களில் சிலர் நோட்டீஸ் ஒட்டி வருகின்றனர்.
அதனை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். இனி இப்படியாக நோட்டீஸோ அல்லது சுவரொட்டிகளையோ ஓட்டினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்து உள்ளார். இப்பணிகளை மாநகராட்சி பொறியியல் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment