தமிழக பள்ளிகளில் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு பணிகளை மேற்கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியர் காலிப்பணியிடம்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த 1972 ஆம் ஆண்டு ஆசிரியர் இல்லம் அமைப்பதற்காக வாங்கப்பட்ட இடங்கள் தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி இல்லம் கட்டுவதற்காக அந்த இடத்தை மீட்டுத் தர வேண்டும் என கடலூர் மாவட்ட ஆசிரியர் சங்கம் சார்பில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்க மாநில தலைவர் தீனதயாளன், பொதுச்செயலாளர் ஜான் வெஸ்லி, பொருளாளர் ருக்மாங்கதன், பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் ஆனந்த், திருவள்ளூர் மாவட்ட துணைத்தலைவர் வேதநாயகம் உள்ளிட்டோர் பள்ளிக் கல்வித்துறைக்கு மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த மனுவில், ‘தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் ஆசிரியர் பணிக்கான காலி இடங்களை கலந்தாய்வு மூலம் நிரப்பவும், ஆசிரியர்களின் உயர் கல்வி தகுதியின் அடிப்படையில் பின்னேற்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கடலூர் மாவட்டம் சுப்பராயலு நகரில் உள்ள 1 ஏக்கர் 20 சென்ட் இடத்தில் ஆசிரியர் இல்லம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி கடந்த 20.06.1972 ல் முதன்மை மாவட்ட கல்வி அலுவலர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த இடம் தற்போது ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த இடத்தை திரும்ப மீட்டு, கடலூரில் ஆசிரியர் இல்லம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

No comments:
Post a Comment