Veterinary Medicine 9,335 applications - கால்நடை மருத்துவம் 9,335 பேர் விண்ணப்பம்
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு, 9,335 பேர் விண்ணப்பித்துஉள்ளனர்.இதுகுறித்து, தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
இளநிலை பட்டப் படிப்புகளுக்கான, பி.வி.எஸ்சி., மற்றும் ஏ.ஹெச்., என்ற கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்புகள் உள்ளன.பி.டெக்., என்ற தொழில்நுட்ப படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில், வரும் 26ம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.இதில், பி.வி.எஸ்சி., அண்டு ஏ.ஹெச்., படிப்புக்கு 580; பி.டெக்., படிப்புகளுக்கு 100 இடங்கள் உள்ளன.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடக்கும் மாணவர் சேர்க்கைக்கு, இதுவரை பி.வி.எஸ்சி., அண்ட் ஏ.ஹெச்., படிப்புக்கு 7,825; பி.டெக்., படிப்புக்கு 1,510 என, 9,335 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.பிளஸ் 2 படிப்பில், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் போன்ற படிப்புகளை படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அயல்நாட்டு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினருக்கான இடங்களுக்கு அக்., 14 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை, கால்நடை பல்கலை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment