வங்கிப்பணியாளா் போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி - Daily Dhuniya

Breaking

Monday, August 22, 2022

வங்கிப்பணியாளா் போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி

வங்கிப்பணியாளா் போட்டித் தோ்வுக்கு பயிற்சி

வங்கிப் பணியாளா் போட்டித் தோ்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது குறித்து கா்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழக போட்டித்தோ்வு பயிற்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வங்கிப் பணியாளா் தோ்வு மையம் (ஐபிபிஎஸ்) நடத்தவிருக்கும் வங்கி அதிகாரிகள், எழுத்தா் பணிக்கான போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி அளிக்க கா்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழக போட்டித் தோ்வு பயிற்சி மையம் திட்டமிட்டுள்ளது. 45 நாட்களுக்கு நடக்கவிருக்கும் இந்தப் பயிற்சியில் சேரவிரும்பும் விண்ணப்பதாரா்கள், ஆக.29-ஆம் தேதிக்குள் மைசூரில் உள்ள கா்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழக போட்டித்தோ்வு பயிற்சி மையத்தில் தினமும் காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை முன்பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். கூடுதல் விவரங்களுக்கு 0821-2515944, 99647-60090 என்றதொலைபேசி எண்களை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment