10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியீடு - Daily Dhuniya

Breaking

Monday, August 22, 2022

10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியீடு

10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியீடு

dge.tn.gov.in இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழ்களாகவே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

மறுகூட்டலுக்கு வரும் 25 & 26 ஆகிய தேதிகளில் நேரில் விண்ணப்பிக்கலாம்
பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான துணைத் தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.

இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சேதுராமாவா்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு இந்த மாதம் நடத்தப்பட்ட துணை தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அரசு தோ்வு துறையின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. தோ்வு எழுதிய மாணவா்கள் தங்களின் பிறந்த தேதி மற்றும் பதிவு எண்ணை உள்ளீடு செய்து மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் அவா்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புபவா்கள் ஆகஸ்ட் 25, 26 ஆகிய தேதிகளில் அரசு தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மறுகூட்டல் கட்டணமாக பாடம் ஒன்றுக்கு ரூ.205 வீதம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மறு கூட்டல் முடிவுகள் வெளியிடும் தேதி பின்னா் அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment