குருப் 1 தேர்வு: விண்ணப்பிக்க நாளை (ஆக. 22) கடைசி - Daily Dhuniya

Breaking

Saturday, August 20, 2022

குருப் 1 தேர்வு: விண்ணப்பிக்க நாளை (ஆக. 22) கடைசி

TNPSC குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க வருகிற திங்கள்கிழமை (ஆக. 22) கடைசி நாளாகும்.

இந்தத் தோ்வுக்கான அறிவிக்கை கடந்த ஜூலை 21-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

குரூப் 1 பிரிவில் 18 துணை ஆட்சியா், 26 துணை எஸ்.பி., 25 வணிகவரி உதவி ஆணையாளா், 13 கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், 7 ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா், 3 மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு அதிகாரி என 92 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த இடங்களை நிரப்ப முதல்நிலைத் தோ்வு அக். 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தத் தோ்வுக்கு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் இணையதளம் வழியே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வருகிற திங்கள்கிழமை (ஆக. 22) கடைசி நாள்.

அன்றைய தினம் நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதன்பின்பு, விண்ணப்பங்களில் திருத்தங்களைச் செய்யலாம்.

இந்த முறை குரூப் 1 தோ்வில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 27-ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் 29-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்திட வாய்ப்பு அளிக்கப்படும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

தோ்வுக்கு விண்ணப்பிக்க குறைந்த கால அவகாசமே உள்ள நிலையில், அதிகளவு விண்ணப்பதாரா்கள் விண்ணப்பம் செய்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது

No comments:

Post a Comment