க்ளவுட் கம்ப்யூட்டிங் துறைக்கு எதிர்காலத்தில் அதிக வேலை வாய்ப்பு - Daily Dhuniya

Breaking

Monday, August 22, 2022

க்ளவுட் கம்ப்யூட்டிங் துறைக்கு எதிர்காலத்தில் அதிக வேலை வாய்ப்பு

உலகம் முழுவதும் டிஜிட்டலாக மாறிக் கொண்டிருப்பதால், டிஜிட்டல் சர்கியூட், குவன்டம் கம்யூட்டிங், க்ளவுட் கம்ப்யூட்டிங் துறைக்கு எதிர்காலத்தில் அதிக வேலை வாய்ப்பு உள்ளது என கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசினார். தினமலர் நாளிதழ் சார்பில், உங்களால் முடியும் நிகழ்ச்சி விழுப்புரம், சென்னை - திருச்சி சாலை, தெய்வாணையம்மாள் கல்லுாரியில் நேற்று நடந்தது.3 இதில், கல்லுாரி பாட பிரிவுகள் என்ற தலைப்பில், கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி பங்கேற்று பேசுகையில்; இந்தாண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்து 2026ம் ஆண்டு வெளியே வரும்போது பெரிய சவால் காத்திருக்கிறது. காரணம் அனைத்து மாணவர்களும் ஒரே பாட பிரிவை தேர்வு செய்து படிப்பது. மொத்த பொறியியல் படிப்பில் 50 சதவீதம் கம்ப்யூட்டர் சயின்ஸ் தான். இத்தனை பேரும் படித்து முடித்து வெளியே வந்தால் வேலை வாய்ப்பு கிடைக்குமா என்பதை சிந்திக்க வேண்டும். பொறியியலுக்கு வாய்ப்புகள் உள்ளது. ஆனால், ஒரு குறிப்பிட்ட பிரிவுக்கு மட்டும் கிடையாது.

மல்டி டிசிபிலனரிக்கு தான் வாய்ப்பு. உலகம் முழுவதும் டிஜிட்டலாக மாறப்போகிறது. புரோகிராமிங் லாங்குவேஜ் மட்டும் போதாது. படிப்பை தாண்டி பல டெக்னாலஜி வளர்ந்து வருகிறது. கல்லுாரியில் சேரும் மாணவருக்கு தற்போதுள்ள சந்தர்ப்பம், சூழ்நிலை, வேலை வாய்ப்பு, தொழில்நுட்பம் முழுவதும் மாறி இருக்கும். இதை புரிந்து கொண்டால் தவறு செய்ய மாட்டார்கள். வாய்ப்பை தேடி செல்பவன் வெற்றி பெறுவார். கம்ப்யூட்டர் சயின்ஸ், டிஜிட்டல் சர்கியூட், குவன்டம் கம்ப்யூட்டிங், க்ளவுட் கம்ப்யூட்டிங் இன்டர்கிரேட் செய்பவர்களுக்கு எதிர்காலத்தில் அதிக வேலை வாய்ப்பு உள்ளது.
கம்ப்யூட்டர் சையின்ஸ் எடுத்தால், தன் துறை சார்ந்து தன் திறன்களை அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். டெக்னாலஜி விஸ்வரூமாக மாறி வருகிறது. அதனால் கல்லுாரியை தேர்வு செய்யும்போது, நவீன தொழில்நுட்ப லேப் இருக்கிறதா, திறன் வளர்ச்சி பயிற்சி அளிக்கப்படுகிறதா, பாட திட்டங்களை தாண்டி திறன் கற்று தரப்படுகிறதா என்பதை தெரிந்து கொண்டு சேருங்கள். வரும் 2026ம் ஆண்டுகளில் கல்லுாரியில் நடத்தும் போட்டிகள் மூலமே வேலை வாய்ப்புக்கு ஆட்கள் எடுப்பர். பாட பிரிவை தேர்வு செய்யும்போது, முதல் கட்டமாக இ.சி.இ., கம்ப்யூட்டர், ஐ.டி. என்ற வரிசையில் தேர்வு செய்யலாம்.

ரப்பர், செராமிக், பார்மா, தயாரிப்பு உள்ளிட்ட சில பாட பிரிவுகளை கடைசியாக வைத்து கொள்ளுங்கள். சிலர் வித்தியாசமாக பாடத்தை தேர்வு செய்து இன்று வேலை வாய்ப்பு இன்றி கிடக்கின்றனர்.நீங்கள் எந்த பாட பிரிவை தேர்வு செய்தாலும், கூடுதலாக என்ன படிக்கிறீர்களோ அதை பொறுத்தே வேலை வாய்ப்பு மற்றும் சம்பளம் நிர்ணயிக்கப்படும். பாட பிரிவுகளை தேர்வு செய்வதற்கு முன்பு எந்தெந்த கல்லுாரி, எந்த பாட பிரிவுகள் விருப்பம் என்பதை முதலில் சார்ட் தயாரிக்க வேண்டும். கல்லுாரியை தேர்வு செய்த பின்பு, அதற்குரிய கட்டணம் உள்ளிட்ட விபரங்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள். அப்வேர்ட் மூமண்ட் முறையில் காத்திருந்தால், அதில் கிடைக்கும் பாட பிரிவே இறுதியானது. அதை மாற்ற முடியாது என கூறினார்.

No comments:

Post a Comment